Thursday, 17 November 2016

அக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகளை அகற்ற கூடாது? ஏன்


  அக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகளை அகற்ற கூடாது? ஏன் 


கண் இமைகள், புருவம், அக்குள், பிறப்புறுப்பு பகுதிகள் என மனிதர்களுக்கு சில இடங்களில் வளரும் முடிகள் மறைமுகமாக பாதுகாப்பாக இருக்கிறது என்பது தான் உண்மை.


மனிதர்கள் தோன்றிய காலத்தில், மற்ற விலங்குகள் போல மனிதர்களுக்கும் உடல் முழுக்க முடிகள் இருந்தன. காலப்போக்கில் வாழ்வியல் மற்றும் சுற்றுப்புற சூழல் மாற்றத்தால் முடி வளர்ச்சி குறைந்து. உடலின் சில பாகங்களில் மட்டுமே மனிதர்களுக்கு முடி வளர்கிறது.















கண் இமைகள், புருவம், அக்குள், பிறப்புறுப்பு பகுதிகள் என மனிதர்களுக்கு சில இடங்களில் வளரும் முடிகள் மறைமுகமாக பாதுகாப்பாக இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், சமீப காலமாக ஃபேஷன், அழகு என்ற பெயரில் நாம் மொத்தமாக முடிகளை அகற்றி விடுகிறோம். இனி, ஏன் மனிதர்கள் அக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகள் அகற்ற கூடாது என்பது குறித்து பார்க்கலாம்...















என்ன காரணம்? நமது உடலில் ஆங்காங்கே முடி வளர்வது சில காரனங்களுக்காக தான். உதாரணமாக, இமைகள் கண்களை தூசு படாமல் பாதுகாக்கிறது, புருவம், வியர்வை கண்களை பாதிக்காமல் இருக்க உதவுகிறது, மூக்கு மற்றும் காதுகளில் வளரும் முடி நுண்ணிய பொருட்கள் உடலுக்குள் புகாமல் இருக்க உதவுகிறது.















. தலைமுடி! 

தலைமுடி அதிக வெப்பம் மற்றும் குளிர் தலை மற்றும் மூளையை பாதிக்கலாம் இருக்க உதவுகிறது. ஒருவேளை வெப்பம், மற்றும் குளிர் நேரடியாக தலையில் தாக்கத்தை உண்டாக்கினால், மூளையிலும் தாக்கம் உண்டாகும். உடலில் வளரும் முடிகளும் இதே காரணத்திற்காக தான் வளர்கின்றன. பாதுகாப்பை அளிக்கின்றன















. பூரித்து போகும் போது முடி எழுதல்! சில சமயம் நீங்கள் பூரிப்படையும் போது முடிகள், எழும்பி நிற்கும். இதற்கு காரணம். ஒவ்வொரு தனி முடியும், தசையுடன் சேர்ந்து, தொடர்புக் கொண்டு இருக்கிறது.



 அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் | 
காரணம் #1 

முதல் காரணம், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் அதிக வெப்பம் ஆதல் சரியானதல்ல. இப்பகுதிகளில் வளரும் முடி, அதிக வெப்பம் ஆகாமல் பாதுகாக்கின்றன.






அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் |
 காரணம் #2 

இரண்டாம் காரணம், நடக்கும் போது, ஓடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் உராய்வை இப்பகுதிகளில் வளரும் முடிகள் குறைக்க உதவுகின்றன















அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் |
 காரணம் #3 
மூன்றாம் காரணம், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடிகள், உடலுறவு உணர்சிகளை தூண்ட உதவுகின்றன. 

















மேலும், தாடி, அக்குள், பிறப்புறுப்பு பகுதில் வளரும் முடிகளில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நீங்கள் குளித்து சுத்தமாக இருந்தால் போதுமானது. இவ்விடங்களில் முடிகளை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
















உண்மைகள்! * 

சராசரியாக ஒரு மனிதரின் தலையில் மட்டும் 1,30,000 முடிகள் இருக்கின்றன. 

* இதில் 93% தற்போது வளர்ந்து கொண்டிருக்கும். * மாதத்திற்கு 1 சென்டிமீட்டர் அளவு முடி சராசரியாக வளர்கிறது. 

* ஒருநாளுக்கு சராசரியாக உங்களுக்கு நூறு முடிகள் வரை உதிரும். * ஆராய்ச்சியாளர்களுக்கு உங்களை பற்றி அறிய வெறும் மூன்று சென்டிமீட்டர் முடி போதுமானது.

 * முடிகளின் வாழ்நாள் சராசரியாக ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகளும், பெண்களுக்கு நான்கு ஆண்டுகளும் ஆகும்.

ஆரோக்கியமான நேரம் எது? மலம் கழிக்க

 ஆரோக்கியமான நேரம் எது? மலம் கழிக்க


நீங்கள் மலம் கழிக்கும் நேரத்தை வைத்தும் உங்கள் ஆரோக்கியத்தை கண்டறிய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?





இதர கடன் பிரச்சனைகளை விட, இந்த காலை கடன் பிரச்சனை தான் மனிதர்களை பாடாய்ப்படுத்தி விடும். எந்த சிரமும் இன்றி காலை கடனை கழிப்பவர்கள் தான் உண்மையில் புண்ணியம் செய்தவர்கள். இன்றைய ஸ்மார்ட் போன் டிஜிட்டல் யுகம், உணவு கலாச்சார மாற்றங்கள் போன்றவை மலம் கழித்தலில் பிரச்சனைகள், கோளாறுகளை உண்டாக்குகின்றன. மலம் கழித்தலில் உண்டாகும் பிரச்சனைகள் உங்கள் ஆரோக்கியத்தை மெல்லே, மெல்ல கரையான் போல அரிக்க துவங்கும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.















எது சிறந்த நேரம்? நமது சிறுகுடல், முந்தய தினம், இரவு உண்ட உணவை செரிமானம் ஆனது போக கழிவை முதல் வேலையாக காலையில் தான் வெளியேற்ற தயாராகும். நீங்கள் கண் விழித்த முதல் 30 நிமிடங்களில் சிறுகுடல் கழிவுகளை வெளியேற்ற தயார் நிலையில் இருக்கும்.















சிரமமாக இருக்கிறதா? காலை நீங்கள் கண்விழித்த உடன் முதல் வெளியாக செய்ய வேண்டியது மலம் கழிப்பது தான். ஒருவேளை மலம் கழிப்பதில் சிரமமாக உணர்ந்தால், ஒரு கப் காபி, இதமான சுடுதண்ணி, சுடுதண்ணியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது போன்றவற்றை முயற்சி செய்யலாம்.















காலையில் மலம் கழிக்க முடியாவிட்டால்? ஒருவேளை காலை வேளையில் மலம் கழிக்க முடியவில்லை, வரவில்லை, முயற்சித்தாலும் சிரமமாக இருக்கிறது எனில், கவலைப்பட வேண்டாம். தினமும் நீங்கள் சரியான நேரத்தில் மலம் கழிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.















கோல்டன் ரூல்! சிலருக்கு 8 மணிக்கு, சிலருக்கு காலை சிற்றுண்டி கழித்த அரைமணிநேரம் கழித்து, சிலருக்கு அலுவலகம் சென்ற பிறகு கூட மலம் கழிக்க வரலாம். தினமும் ஒரே நேரத்தில் நீங்கள் சீராக மலம் கழித்தல், உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இதை ஆங்கில மருத்துவ முறையில் கோல்டன் ரூல் என்றும் குறிப்பிடுகின்றனர்.















எத்தனை முறை இயல்பு? ஒரு நாளைக்கு இரண்டில் இருந்து மூன்று முறை வரை மலம் கழித்தல் இயல்பு. இரண்டு நாளுக்கு ஒருமுறை அல்லது ஒரே நாளில் ஐந்து முறைக்கும் மேல் மலம் கழிக்க செல்லுதல் போன்றவை உங்கள் குடல் இயக்கம் மற்றும் செரிமானத்தில் ஏதோ மாற்றங்கள் உண்டாவதை உணர்த்துபவை. எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது

Tuesday, 8 November 2016

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் செக்ஸ் ஹார்மோன்குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க சில வழிகள்!




ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் 
செக்ஸ் ஹார்மோன்குறைபாடு 
ஏற்படுவதைத் தடுக்க சில வழிகள்!

டெஸ்டோஸ்டிரோன் என்பது முக்கியமான செக்ஸ் ஹார்மோன். இது ஆண்களின் உடலில் அதிகமாக இருக்கக்கூடியது. இது ஆண்களின் உடல் அம்சங்களைக் கட்டுப்படுத்துகிறது. இது உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது பெண்களின் உடலிலும் இருக்கும். ஆனால் அது சிறிய அளவில் தான்.

விந்தணுவை அதிகரிக்க வேண்டுமா? 
இந்த உணவுகளை சாப்பிடுங்க...
இந்த ஹார்மோன் தசைகளின் அடர்த்தி, பாலுணர்ச்சி, ஆற்றல் அளவு போன்றவற்றுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. ஆண்களின் உடலில் இது குறைவாக இருந்தால், அதனால் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஆற்றல், பாலுணர்ச்சி மற்றும் தசைகளின் அடர்த்தி போன்றவை குறைவதோடு, இதர பிரச்சனைகளான எரிச்சல், மன இறுக்கம், தூக்கமின்மை, தன்னம்பிக்கை இல்லாமை போன்றவற்றையும் சந்திக்கக்கூடும்.

நீங்க 'அதுல' ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க... இங்கு ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டைத் தடுக்கவும், அது ஏற்படாமல் இருக்கவும் ஒருசில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆண்கள் பின்பற்றினால், டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டைத் தடுக்கலாம்.


நல்ல தூக்கத்தைப் பெறுவது உடல் ஆரோக்கியம் மேம்பட ஒருவருக்கு போதிய அளவு தூக்கம் மற்றும் ஓய்வு அவசியம். அதுவும் குறைந்தது 7 மணிநேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது. அமெரிக்க மருத்துவ சங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஒருவர் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவு 10-15 சதவீதம் குறைவது தெரிய வந்துள்ளது.


இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஆய்வு ஒன்றின் படி, இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், அது டெஸ்ரோஸ்டிரோன் ஹார்மோனை 25 சதவீதம் வரை குறைப்பது தெரிய வந்துள்ளது. எனவே, மாவுப் பொருட்கள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை ஆண்கள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.


மன அழுத்தத்தைக் குறைப்பது மன அழுத்தம் டெஸ்ரோஸ்டிரோன் அளவைக் குறைப்பதோடு, மன இறுக்கம், விரோதம் மற்றும் கவலையை அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளான போதிய தூக்கத்தை மேற்கொள்ளல், உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்து வருதல் போன்றவற்றை மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.


தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது நல்ல கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க முடியும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும். முக்கியமாக அன்றாடம் உடற்பயிற்சியை செய்து வந்தால், தசைகளின் அடர்த்தி குறைவது தடுக்கப்படுவதுடன், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியும் சீராக்கப்படும். எனவே ஸ்குவாட்ஸ், புஷ்-அப், டெட்லிப்ட், சின்-அப்ஸ், பென்ச் பிரஸ் போன்ற பயிற்சிகளை தினமும் செய்து வாருங்கள்.


ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறாமல் போய் உடல் ஆரோக்கியம் மோசமாகும். எனவே உடலில் டெஸ்ரோஸ்டிரோன் அளவு குறையாமல் இருக்க வேண்டுமானால், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும். டெஸ்ரோஸ்டிரோன் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் 



வைட்டமின் டி வைட்டமின் டி டெஸ்ரோஸ்டிரோன் கூட்டுச்சேர்க்கைக்கு, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரமான விந்தணுக்களுக்கு அவசியமான ஒன்று. இந்த வைட்டமின் அதிகாலை சூரியக் கதிர்களிடமிருந்து ஏராளமான அளவில் கிடைக்கும். எனவே தினமும் காலையில் சூரிய ஒளியில் உடற்பயிற்சியை அல்லது யோகாவை செய்து வாருங்கள்.



ஜிங்க் விந்தணுவில் உள்ள முக்கிய உட்பொருள் ஜிங்க். இது உடலில் தானாக உற்பத்தி செய்யப்படும். ஆனால் வயது அதிகரிக்கும் போது இந்த கனிமச்சத்தின் உற்பத்தி குறையும். டெஸ்ரோஸ்டிரோன் உற்பத்திக்கு இது மிகவும் அவசியமானது. ஆகவே ஜிங்க் சத்து உடலுக்கு கிடைக்க வேண்டுமானால், பச்சை பால், பீன்ஸ், புரோட்டீன் உணவகள், சீஸ், சூரியகாந்தி விதை, தயிர், பூசணி விதை போன்ற உணவுப் பொருட்களை உட்கொண்டு வாருங்கள். இருப்பினும் எதிலும் அளவு என்பது அவசியம். எனவே அளவுடன் உட்கொண்டு நன்மைப் பெறுங்கள்.



ஆரோக்கியமான கொழுப்புக்கள் டெஸ்ரோஸ்டிரோன் அளவு அதிகரிக்க வேண்டுமானபால், நல்ல கொழுப்புக்களை உட்கொள்ளும் அளவை அதிகரிக்க வேண்டும். இத்தகைய நல்ல கொழுப்புக்களானது நட்ஸ், ஆலிவ் ஆயில், பச்சை முட்டை மற்றும் அவகேடோவில் அதிகமாக உள்ளது.


குறிப்பு ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தால், அதனால் ஏராளமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மன இறுக்கம், மிகுதியான சோர்வு, குறைவான பாலுணர்ச்சி, எரிச்சலுணர்வு போன்றவை இருந்தால், சாதாரணமாக விட்டுவிடாமல் மருத்துவரை அணுகி போதிய சிகிச்சையைப் பெறுங்கள். ஏனெனில் அவை குறைவான டெஸ்டோஸ்டிரோன் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.



Thursday, 20 October 2016

WORLD OSTEOPOROSIS DAY OCTOBER 20

WORLD OSTEOPOROSIS DAY
OCTOBER 20




World Osteoporosis Day is observed annually on 20 October, and launches a year-long campaign dedicated to raising global awareness of the prevention, diagnosis and treatment of osteoporosis and metabolic bone disease.

[1] Organized by the International Osteoporosis Foundation (IOF), World Osteoporosis Day involves campaigns by national osteoporosis patient societies from around the world with activities in over 90 countries.[2]

History[edit]
World Osteoporosis Day was launched on 20 October 1996 by the United Kingdom’s National Osteoporosis Society and supported by the European Commission. Since 1997, the day has been organised by the International Osteoporosis Foundation. In 1998 and 1999, 

the World Health Organization acted as co-sponsor of World Osteoporosis Day. The day also marks the launch of a year-long campaign to raise awareness of osteoporosis and metabolic bone disease. Since 1999 these campaigns have featured a specific theme.

Friday, 30 September 2016

சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?

சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?




கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. 

* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் ன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.



* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.


* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.


* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.


* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.


* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.


டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன...



 இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; 


குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!


சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?

முக்கியமான 5 கட்டளைகள்:

மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம், உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். 


ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள். 


வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள். 


* பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். 


ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.

* சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். 


குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.


* குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.


அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!

‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...”

‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!’’


‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது... 
ஆண்களுக்கு வளரலை?”

‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’


‘‘பலாத்காரம்னா என்னப்பா?”

‘‘கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’



‘‘மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு வாங்குறீங்க?”

‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.’’


‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”

‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’

அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்! 

குட் டச் / பேட் டச் 

குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - 

குட் டச். தடவக் கூடாது - 

பேட் டச். மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. 

வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. 
கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. 
மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - 


பேட் டச். அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . 

வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள்

காதல் 

குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்...
‘‘வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்’’ என்பதுபோலப் பேசுங்கள்.

சுய இன்பம் 

ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். 

அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.


ஆப்த வாக்கியம் 

ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். 


எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். 


வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; 


எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்! 


டாக்டர் விகடன் ஜன.2013

Saturday, 24 September 2016

மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்!!!


மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்!!!


உணவானது வயிற்றை நிறைப்பதற்கு மட்டும் தான் என்பதில்லை. இந்த உணவு தான் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு, உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுக்காக்கிறது. 

உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள். சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும், அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.


சிலர் சாதாரணமாக சிறிதாக உடல் நிலை சரியில்லையென்றாலும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் மருந்துகளை பெற்று, அதனை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு கடைகளில் சென்று பணத்தை செலவழித்து வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, நம் முன்னோர்கள் பின்பற்றி சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிட்டாலே ஒரு சில சிறிய நோயை கூட சரிசெய்யலாம். சரி இப்போது எந்த உணவுகளை சாப்பிட்டால், என்ன நோய் அல்லது பிரச்சனை சரியாகும் என்பதைப் பார்ப்போமா!!!

சளி மற்றும் ஜலதோஷத்திற்கு இஞ்சி

இது ஒரு பழங்கால மருத்துவம். இதனை சளி மற்றும் ஜலதோஷம் இருந்தால்,
அப்போது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இல்லையெனில் அதனை டீ போட்டும் செய்து குடிக்கலாம்.

காயங்களுக்கு தேன்

தேனில் நிறைய ஆன்டிசெப்டிக் பொருள் நிறைந்துள்ளது. எனவே இந்த தேனை அரிப்பு, காயம் அல்லது வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் வைத்தால், அவை சரியாகிவிடும்.

வலிக்கு மிளகாய்,மிளகு 


மிளகாயில் உள்ள காப்சைசின் என்றும் பொருள், உடலில் வலி ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் மிளகு சாப்பிட்டால், மூட்டு வலி குணமாகும்.

நீரிழிவிற்கு பாகற்காய்

பாகற்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால்,
அவை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைக்கும்.












பேனை போக்கும் ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் மட்டும், அவை பிரபலமானது இல்லை.
இந்த எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்தால், தலையில் உள்ள பேனை முற்றிலும் போக்கலாம். அதுமட்டுமின்றி, ஸ்பால்ப்பில் ஏற்படும் பிரச்சனையும் போக்கலாம்.




மருக்களுக்கு வாழைப்பழம்

சருமத்தில் மருக்கள் அதிகம் இருந்தால், அவை உடல் அழகையே கெடுத்துவிடும். 
ஆனால் அந்த மருக்களை வாழைப்பழம் நீக்கிவிடும். ஏனெனில் அந்த பழத்தில் பொட்டாசியம் இருப்பதால், அவை மருக்களை நீக்கிவிடும்.







துர்நாற்றமுள்ள பாதத்திற்கு ப்ளாக் டீ

பாதங்களில் துர்நாற்றம் வருவதற்கு காரணம், ஹார்மோன்கள் தான். ஆகவே அதனை போக்க வெதுவெதுப்பான ப்ளாக் டீயில் பாதத்தை ஊற வைத்து, கழுவினால், அந்த நாற்றத்தை தடுக்கலாம்.

குமட்டலுக்கு எலுமிச்சை

எப்போது பயணத்தின் போது வாந்தி வருவது போல் அல்லது குமட்டல் ஏற்படுகிறதோ,
அப்போது எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், அதனை சரிசெய்யலாம்.









பழுப்பு நிற சருமத்திற்கு பால்

ஓசோனில் ஓட்டை ஏற்பட்டதால், சூரிய வெப்பமானது நேரடியாக சருமத்தை தாக்குகிறது. இதனால் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தை அடைகிறது. எனவே அடிக்கடி பாலை வைத்து, கழுவி வந்தால், இந்த பிரச்சனையை தடுக்கலாம்.

உடல் வறட்சிக்கு தர்பூசணி

உடலுக்கு போதுமான நீர்ச்சத்தானது இல்லையெனில் அவை வறட்சியடைந்துவிடும்.
அதிலும் தர்பூசணியில் 60 சதவீதம் தண்ணீரானது உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடல் வறட்சியைத் போக்கலாம்.








சர்க்கரை நோய்க்கு வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கி, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் குடித்தால்,

 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.