Friday, 30 September 2016

சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?

சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?




கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. 

* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் ன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.



* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.


* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.


* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.


* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.


* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.


டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன...



 இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; 


குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!


சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?

முக்கியமான 5 கட்டளைகள்:

மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம், உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். 


ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள். 


வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள். 


* பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். 


ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.

* சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். 


குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.


* குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.


அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!

‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...”

‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!’’


‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது... 
ஆண்களுக்கு வளரலை?”

‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’


‘‘பலாத்காரம்னா என்னப்பா?”

‘‘கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’



‘‘மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு வாங்குறீங்க?”

‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.’’


‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”

‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’

அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்! 

குட் டச் / பேட் டச் 

குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - 

குட் டச். தடவக் கூடாது - 

பேட் டச். மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. 

வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. 
கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. 
மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - 


பேட் டச். அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . 

வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள்

காதல் 

குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்...
‘‘வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்’’ என்பதுபோலப் பேசுங்கள்.

சுய இன்பம் 

ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். 

அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.


ஆப்த வாக்கியம் 

ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். 


எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். 


வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; 


எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்! 


டாக்டர் விகடன் ஜன.2013

Saturday, 24 September 2016

மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்!!!


மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்!!!


உணவானது வயிற்றை நிறைப்பதற்கு மட்டும் தான் என்பதில்லை. இந்த உணவு தான் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு, உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுக்காக்கிறது. 

உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள். சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும், அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.


சிலர் சாதாரணமாக சிறிதாக உடல் நிலை சரியில்லையென்றாலும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் மருந்துகளை பெற்று, அதனை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு கடைகளில் சென்று பணத்தை செலவழித்து வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, நம் முன்னோர்கள் பின்பற்றி சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிட்டாலே ஒரு சில சிறிய நோயை கூட சரிசெய்யலாம். சரி இப்போது எந்த உணவுகளை சாப்பிட்டால், என்ன நோய் அல்லது பிரச்சனை சரியாகும் என்பதைப் பார்ப்போமா!!!

சளி மற்றும் ஜலதோஷத்திற்கு இஞ்சி

இது ஒரு பழங்கால மருத்துவம். இதனை சளி மற்றும் ஜலதோஷம் இருந்தால்,
அப்போது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இல்லையெனில் அதனை டீ போட்டும் செய்து குடிக்கலாம்.

காயங்களுக்கு தேன்

தேனில் நிறைய ஆன்டிசெப்டிக் பொருள் நிறைந்துள்ளது. எனவே இந்த தேனை அரிப்பு, காயம் அல்லது வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் வைத்தால், அவை சரியாகிவிடும்.

வலிக்கு மிளகாய்,மிளகு 


மிளகாயில் உள்ள காப்சைசின் என்றும் பொருள், உடலில் வலி ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் மிளகு சாப்பிட்டால், மூட்டு வலி குணமாகும்.

நீரிழிவிற்கு பாகற்காய்

பாகற்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால்,
அவை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைக்கும்.












பேனை போக்கும் ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் மட்டும், அவை பிரபலமானது இல்லை.
இந்த எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்தால், தலையில் உள்ள பேனை முற்றிலும் போக்கலாம். அதுமட்டுமின்றி, ஸ்பால்ப்பில் ஏற்படும் பிரச்சனையும் போக்கலாம்.




மருக்களுக்கு வாழைப்பழம்

சருமத்தில் மருக்கள் அதிகம் இருந்தால், அவை உடல் அழகையே கெடுத்துவிடும். 
ஆனால் அந்த மருக்களை வாழைப்பழம் நீக்கிவிடும். ஏனெனில் அந்த பழத்தில் பொட்டாசியம் இருப்பதால், அவை மருக்களை நீக்கிவிடும்.







துர்நாற்றமுள்ள பாதத்திற்கு ப்ளாக் டீ

பாதங்களில் துர்நாற்றம் வருவதற்கு காரணம், ஹார்மோன்கள் தான். ஆகவே அதனை போக்க வெதுவெதுப்பான ப்ளாக் டீயில் பாதத்தை ஊற வைத்து, கழுவினால், அந்த நாற்றத்தை தடுக்கலாம்.

குமட்டலுக்கு எலுமிச்சை

எப்போது பயணத்தின் போது வாந்தி வருவது போல் அல்லது குமட்டல் ஏற்படுகிறதோ,
அப்போது எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், அதனை சரிசெய்யலாம்.









பழுப்பு நிற சருமத்திற்கு பால்

ஓசோனில் ஓட்டை ஏற்பட்டதால், சூரிய வெப்பமானது நேரடியாக சருமத்தை தாக்குகிறது. இதனால் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தை அடைகிறது. எனவே அடிக்கடி பாலை வைத்து, கழுவி வந்தால், இந்த பிரச்சனையை தடுக்கலாம்.

உடல் வறட்சிக்கு தர்பூசணி

உடலுக்கு போதுமான நீர்ச்சத்தானது இல்லையெனில் அவை வறட்சியடைந்துவிடும்.
அதிலும் தர்பூசணியில் 60 சதவீதம் தண்ணீரானது உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடல் வறட்சியைத் போக்கலாம்.








சர்க்கரை நோய்க்கு வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கி, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் குடித்தால்,

 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

சிறப்பு மருத்துவரை பார்ப்பதும் சில சமயத்தில் அவசியமானதே


சிறப்பு மருத்துவரை பார்ப்பதும் 
சில சமயத்தில் அவசியமானதே 

மருத்துவர் - நோயாளி உறவு என்பது மனரீதியாக மட்டுமல்ல, உடல் நோய்கள் குணமடைதலில் மருந்துகளுக்கு நிகரான முக்கியப் பங்கையும் வகிக்கிறது 

சிக்மண்ட் ஃபிராய்டு











ஒரு நகைச்சுவைக் காட்சியில் வயிற்று வலி வந்த நோயாளியைச் சுற்றிப் பல மருத்துவர்கள் நிற்பார்கள். ஒருவர் குடல் நோய் மருத்துவர், அவர் உடனடியாகக் குடல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பார். சிறுநீரக மருத்துவர் கிட்னியில் இருக்கும் கல்லை உடைக்க வேண்டும் என்றும், எலும்பு மருத்துவர் எலும்பில் உடனே பிளேட் மாட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள்.


இப்படி ஒவ்வொரு சிறப்பு மருத்துவரும் ஒவ்வொன்றைக் கூற நோயாளி மயங்கிவிடுவார். தற்போது இந்த நகைச்சுவை மருத்துவ உலகில், மருத்துவமனைகளில் அன்றாடம் நடக்கும் சம்பவமாக மாறிவிட்டது. குடும்ப மருத்துவர் யார், அவருடைய தேவை என்ன என்பது பற்றி மனநல மருத்துவர் ஆ.காட்சன் கவனப்படுத்தும் விஷயங்கள்:

ஒரு டாக்டரை, இவர் எங்களுடைய பேமிலி டாக்டர் என்றும், இவர்கிட்டதான் எங்க குடும்பமே மருத்துவம் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லக் கேள்விபட்டிருப்போம். ஆனால், ஃபேமிலி டாக்டர் என்று அழைக்கப்படும் குடும்ப மருத்துவர் யார் என்று தெரிந்துகொள்வது அவசியம்.

முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே எந்த நோயாக இருந்தாலும் நன்கு பரிச்சயமான ஒரு மருத்துவரிடம் மட்டுமே, பெற்றோர் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த நபரின் உடல்நிலை, அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள், குடும்பம், பொருளாதாரச் சூழ்நிலை, எந்த மருந்து ஒத்துக்கொள்ளும், எது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது போன்ற விவரங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படியாகி இருக்கும்.


ஒருவேளை அவர் தனது மருத்துவ வரம்பை மீறிய நோயாக இருந்தால், எந்தச் சிறப்பு மருத்துவரிடம் அல்லது உயர் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்பதை உங்களுக்கு வழிகாட்டும் அல்லது முடிவுஎடுக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்து சொல்வார் சரி, நோய்க்கும் குடும்ப மருத்துவருக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம்.

நம்பிக்கையே அடிப்படை காரணம்

ஒரு நோயாளியின் நோயைக் கண்டறிவது மற்றும் குணப்படுத்துவதில் அந்த நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் நம்பிக்கை மற்றும் புரிந்துகொள்ளலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவு தான் அடித்தளம் எனக் கூறுகிறார் எக்கிஹார்டு ஒத்மர் என்ற மருத்துவ அறிஞர். ஒரு நோயாளி மருத்துவரிடம் கொண்டுள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பு, உணர்ச்சிகள்தான், மருத்துவர் - நோயாளி என்ற உறவை மேம்படுத்துவதுடன் நோய் குணமடைய ஒரு காரணியாகவும் அமையும்.

இதை உளப்பகுப்பாய்வின் தந்தை என்றழைக்கப்படும் 19-ம் நூற்றாண்டின் மனநல மருத்துவர் சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund freud) தெளிவாக விளக்கியுள்ளார். தாய் - குழந்தை உறவு வளர்ச்சிக்கும், கணவன் - மனைவி உறவு |வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு இந்த மருத்துவர் - நோயாளி உறவு என்பது மனரீதியாக மட்டுமல்ல, உடல் நோய்கள் குணமடைதலில் மருந்துகளுக்கு நிகரான முக்கியப் பங்கையும் வகிக்கிறது.

இன்றைய மருத்துவ உலகம்

இத்தகைய மதிப்பு வாய்ந்த உறவு, இன்றைக்கு வெறும் சேவை அளிப்பவர் - வாடிக்கையாளர் என்ற நிலைக்கு மாறியதற்கு இரு தரப்பினருமே பொறுப்பு தான். பெரிய மால்களில் பலரும் விண்டோ ஷாப்பிங் செய்வதைப் பார்க்கலாம்.


அது போலத்தான் பல நோயாளிகள் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து, ஒவ்வொரு நோய் அறிகுறிக்கும் ஒவ்வொரு சிறப்பு நிபுணரைத் தேடி மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கும் நிலை உள்ளது. திருப்திக்காக ஒரே பிரச்சினைக்குப் பல மருத்துவர்களின் ஆலோசனையை நாடும் நிலை உள்ளது. இதை ‘டாக்டர் ஷாப்பிங்' என்று சொல்லலாம்.

பின்விளைவுகள்

சுருக்கமாகச் சொன்னால் பல மெக்கானிக்குகளின் கையில் சிக்கிய காரின் கதைதான் இது. மொத்தத்தில், பரஸ்பரப் புரிந்துகொள்ளல் மற்றும் மருத்துவர் - நோயாளி இடையிலான உறவு ஏற்பட இரு பக்கத்தில் உள்ளவர்களும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

குடும்ப மருத்துவர் முறை மாறிவருவதால் நோய் கண்டறிவதில் காலதாமதம், வீண் அலைச்சல், பண விரயம் ஏற்படுவதுடன் மருத்துவத்தின் மீதான நம்பிக்கையும் குறைகிறது. மேலும் முன் காலங்களைக் காட்டிலும் நோயாளியின் உறவினருக்கும் மருத்துவ ஊழியருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றத்தில் இடைவெளி அதிகரித்துள்ளதே காரணம்.


இதனால் சிறப்பு மருத்துவர்களைப் பார்ப்பதே தேவை இல்லை என்று அர்த்தமல்ல. தேவைப்படும் நேரத்தில், அது அவசியமான ஒன்றுதான். ஆனால், குடும்ப மருத்துவர் முறை என்பது, அதைக் காட்டிலும் அதிக நன்மைகள் நிறைந்த விஷயம். நவீனமயமாக்கத்தை பின்பற்றிச் சென்று, பாரம்பரியப் பழக்கங்களை நாம் மறந்து போயிருந்தாலும், நலம் பயக்கும் இந்த மருத்துவர் - நோயாளி உறவைப் பேணி காத்தால் நமது எதிர்காலச் சந்ததிகளுக்கு நல்வாழ்வு நிச்சயம்

Saturday, 17 September 2016

உள்ளாடைகளில்கவனம் தேவை! இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபா:




உள்ளாடைகளில்கவனம் தேவை!

இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபா:















சுத்தமின்மை தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். நம் உடலானது, வியர்வை, எச்சில், சிறுநீர், மலம் என, பல்வேறு வழிகளில் கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. இதில் ஏதேனும் ஒன்று நடக்காமல் போனாலும், வாய் நாற்றம் துவங்கி, உடலில் துர்நாற்றம் வீசுவது வரை நடக்கும். 

சிலருடைய உடலில் மீன் நாற்றம் அடிக்கும். அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளாததே, இதற்கு காரணம். இது தொடர்ந்தால், 'வெஜைனல் இன்பெக் ஷன்' கூட ஏற்படலாம்.

மாதவிலக்கின் போது, அந்தரங்கப் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். அதற்காக, வாசனை அதிகமான சோப்புகளை இந்த இடத்தில் பயன்படுத்தக் கூடாது. இப்படி செய்தால், அந்த இடத்திலுள்ள சுரப்பிகள் அடைப்பட்டு விடும். இதனால், அந்தரங்கப் பகுதி வறண்டு போகும். 


அதேநேரம், சோப்பு போட்டு வாஷ் பண்ணாமல் விட்டாலும், பாக்டீரியாக்கள் அரிப்பு, நாற்றம் என, படுத்தி எடுத்திவிடும். எனவே, மைல்டான சோப்பை பயன்படுத்தலாம். மேலும், அந்தப் பகுதி ரோமங்களை ஷேவ் செய்து கொள்வதால், பொடுகுத் தொல்லை, அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.


உதிரப் போக்கு அதிகம் இருப்பவர்கள், குவாலிடியான, அதிகப்படியான ஈரத்தை இழுக்கும் மெலிதான சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்துங்கள். ரத்தப் போக்கின் அளவைப் பொறுத்து, அதை மாற்றிக் கொண்டே இருங்கள். இல்லையெனில், பாக்டீரியாக்கள் உருவாகி, தொற்று நோய் உண்டாவதுடன், கூடவே கெட்ட நாற்றத்தையும் ஏற்படுத்தும்.


உடல் ஷேப்புக்காக உடம்பை இறுக்கிப் பிடிக்கிற உள்ளாடைகளால், சுவாசிக்க முடியாமல் போவதுடன், ரத்த ஓட்டமும் பாதிக்கும். அதேபோல், காற்றுப் போகாத இறுக்கமான உள்ளாடைகள், வியர்வையைக் கூட காய விடாது. இதனால், பூச்சைத் தொற்று உண்டாகும். எனவே, உடலை இறுக்காத, உடல் சுவாசிக்கும் வகையில் உள்ள உள்ளாடைகள் தான் சிறந்தது.

மாதவிலக்கு சமயங்களில், உள்ளாடைகளை கிருமி நாசினியைப் பயன்படுத்தித் துாய்மைப்படுத்துங்கள். அதோடு, கட்டாயம் அதை சூரிய ஒளியில் உலர்த்தி எடுங்கள். இதனால், ஓடி ஒளியும் மைக்ரோ 
ஆர்கனிசம் கூட, காணாமல் போய்விடும்.கிருமி நாசினி பயன்படுத்தி அலசிய உள்ளாடைகளை, நன்கு தண்ணீரில் அலசுவதும் மிக முக்கியம். ஏனெனில், அதில் இருக்கும் கெமிக்கல், அந்தரங்கப் பகுதியை பாதிப்பதை தவிர்க்கலாம்.

வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், கிருமி நாசினியால் அந்தப் பகுதியை சுத்தம் செய்வது முற்றிலும் தவறு. இதற்கு பதில், மெல்லிய சானிட்டரி லைனரை பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் கடுக்காயை போட்டு கொதிக்க வைத்து, அந்தரங்கப் பகுதியை கழுவினாலும், வெள்ளைப்படுதலால் வருகிற கசகசப்பும், பாக்டீரியல் இன்பெக் ஷனும் போய்விடும்.

கை வைத்தியம் போதும் உடலுக்கு!

கேரட் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை கூறும், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி: 

கரோட்டின் மற்றும் விட்டமின், 'ஏ' சத்து நிறைந்தது கேரட். விட்டமின், 'ஏ' கண்களுக்கு மிகவும் நல்லது என்பதுடன், உடல் திசுக்களுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது. கரோட்டின் சத்து தொடர்ந்து கிடைக்கப் பெற்றால், சருமம் பளிச்சென்றாகும்.


ஒரு, 'கப்' கேரட் துருவலுடன், நான்கு வெள்ளரி துண்டுகள் சேர்த்து, நன்கு அரைத்து, இதை வடிகட்டினால், வழவழவென, 'க்ரீம்' போல வரும். அதை, கண்களை சுற்றி, அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து, கண்களுக்கு மேற்புறமும் வைத்துக் கொள்ளலாம்; 10 நிமிடங்கள் கழித்து, துணியை எடுத்துவிடவும். இது, கண்களை பளிச் என்று ஆக்குவதுடன், கூரிய பார்வை கிடைக்கச் செய்யும். 


வெயிலில் வேலை செய்வோர் மற்றும் லேப்டாப், கணினியில் வேலை செய்வோருக்கு, அந்த வெப்பம் காரணமாக, முகம் மங்கிக் காணப்படும். அரைத்த கேரட்டுடன், ஒரு டீஸ்பூன் பால், சிறிது கடலை மாவு சேர்த்து, முகத்தில், 'பேக்' போட்டு, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, மங்கிய முகம் தன் இயல்பை மீட்கும்.

கேரட்டை பாலில் வேக வைத்து அரைக்க, க்ரீம் போல கிடைக்கும். இதை தினமும் வெளியே செல்லும் போது, மாய்ஸ்ச்சரைசராக முகம், காது மற்றும் கழுத்து பகுதியில் பயன்படுத்தலாம். இதனால், வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும். காது, கழுத்து பகுதிகளில் உள்ள கருமை நீங்குவதோடு, புருவம் அரிப்பதும், புருவத்தில் முடி உதிர்வதும்  தடுக்கப்படும்.

அரை கப் கேரட் சாற்றுடன், சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில், 'பேக்' போட்டு, அரைமணி நேரம் கழித்து உரித்தெடுக்கவும். இதை தொடர்ந்து செய்து வர, கரும்புள்ளிகளுக்கு, 'பை பை' சொல்லலாம். டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு, கன்னங்கள் வெளிறிப் போயிருக்கும். அதை சரிசெய்ய, ஒரு கேரட், இரண்டு பேரீச்சம் பழத்துடன், சிறிது பால் சேர்த்து அரைக்கவும். இதை கன்னங்களுக்கு, 'பேக்' போட்டு கழுவி வர, இழந்த பொலிவு மீண்டும் கிடைக்கும்.


பிரசவத்துக்கு பின் பெண்களுக்கு, வயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வந்துவிடும். குழந்தை பராமரிப்பு பொறுப்புகளுக்கு இடையே, அதை நீக்கும் வழிமுறைகளை செய்யத் தவறினால், அது நிரந்தரமாக தங்கிவிடும். அதைத் தவிர்க்க, ஐந்து துண்டுகள் கேரட்டுடன், ஐந்து பாதாம் சேர்த்து அரைத்து, தழும்புகளில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து குளிக்கவும். இதை தினமும் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

கேரட் சாறு, கஸ்துாரி மஞ்சள், பார்லி பொடி கலந்து, வாரம் ஒருமுறை சோப்புக்கு பதிலாக, இதை பயன்படுத்தி குளித்து வர, மாசு, துாசால் சருமத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.